Advertisement
Advertisement
Advertisement

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023: இறுதிப்போட்டிக்கான மைதானத்தை உறுதிசெய்த ஐசிசி!

வரும் 2023 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான மைதானத்தை ஐசிசி இன்று உறுதி செய்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan September 21, 2022 • 21:46 PM
 WTC23 Final will be hosted by The Oval in June 2023 while the 2025 Final will be played at Lord's
WTC23 Final will be hosted by The Oval in June 2023 while the 2025 Final will be played at Lord's (Image Source: Google)
Advertisement

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் ஐசிசி முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளில் ஒன்றுதான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப். இதில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் ஐசிசி-யின் முழு நேர உறுப்பினர்களாக உள்ள 9 டெஸ்ட் அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. 2 ஆண்டுகளுக்கு இந்தத் தொடர் நடத்தப்படும். 

ஒவ்வொரு அணியும் தலா 6 டெஸ்ட் தொடர்களில் விளையாட வேண்டும். அதில் 3 தொடர்கள் சொந்த நாட்டிலும், 3 தொடர்கள் வெளிநாடுகளிலும் நடக்கும். லீக் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும். 

Trending


அதன்படி முதல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் 2019-21 காலகட்டத்தில் நடைபெற்றது. அதன் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் விளையாடின. அதில் நியூஸிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த நிலையில், 2021-23 தொடருக்கான இறுதிப் போட்டி இங்கிலாந்தின் புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இப்போது அதனை ஓவலுக்கு மாற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளது ஐசிசி. அதே நேரத்தில் வரும் 2023-25 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் எனவும் ஐசிசி அறிவித்துள்ளது.

2021-23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement