Advertisement

இரானி கோப்பை: வரலாற்று சாதனை நிகழ்த்திய யஷஸ்வின் ஜெய்ஷ்வால்!

இரானி கோப்பை போட்டியில் மத்திய பிரதேசத்துக்கு எதிராக முதல் இன்னிங்சில் இரட்டை சதமும், 2ஆவது இன்னிங்சில் சதமும் அடித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan March 04, 2023 • 18:48 PM
Yashasvi Jaiswal becomes the first batter to record a double hundred and a hundred in the same Irani
Yashasvi Jaiswal becomes the first batter to record a double hundred and a hundred in the same Irani (Image Source: Google)
Advertisement

ரஞ்சி தொடரின் முன்னாள் சாம்பியன் அணியுடன், மற்ற அணிகளை சேர்ந்த வீரர்கள் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி என்ற பெயரில் மோதும் போட்டி இரானி கோப்பை போட்டி ஆகும். அந்தவகையில் மத்திய பிரதேசம் மற்றும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகளுக்கு இடையேயான போட்டி குவாலியரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் கேப்டன் மயன்க் அகர்வால் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் அதன்பின்னர் அபிமன்யூ ஈஸ்வரனும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் இணைந்து அபாரமாக பேட்டிங் விளையாடி 2ஆவது விக்கெட்டுக்கு 371 ரன்களை குவித்தனர். சதமடித்த அபிமன்யூ ஈஸ்வரன் 154 ரன்கள் அடித்தார். அபாரமாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து 213 ரன்களை குவித்தார். ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி முதல் இன்னிங்ஸில் 484 ரன்களை குவித்தது.

Trending


இதையடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய மத்திய பிரதேச அணி, யஷ் துபேவின் சதத்தால்(109) 294 ரன்கள் அடித்தது. மற்ற வீரர்கள் யாரும் பெரிய பங்களிப்பு செய்யாததால் அந்த அணியால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை.

இதையடுத்து 190 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸைத் தொடர்ந்த ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மீண்டும் சிறப்பாக பேட்டிங் ஆடி சதமடித்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 144 ரன்களை குவிக்க, 2ஆவது இன்னிங்ஸில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 246 ரன்கள் அடித்தது. மொத்தமாக 436 ரன்கள் முன்னிலை பெற, மத்திய பிரதேச அணி 437 ரன்கள் என்ற கடின இலக்கை ரெஸ்ட் ஆஃப் இந்தியா நிர்ணயித்தது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இரட்டை சதம்(213) மற்றும் 2ஆவது இன்னிங்சில் சதமடித்ததன் (144) மூலம், இரானி கோப்பை வரலாற்றில் இரட்டை சதம் மற்றும் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். இரானி கோப்பையின் ஒரு பதிப்பில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இரானி கோப்பை போட்டியில் 300 ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை ஜெய்ஷ்வால் பெற்றுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement