என்னுடைய ஸ்ட்ரைக் ரேட் அதிகமாக இருந்தால் தான் அணியின் எண்ணிக்கை அதிகரிக்கும் - யஷஸ்வி ஜெய்ஷ்வால்!
இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதினை பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி என ஆட்டநாயகன் விருது பெற்ற யஷஸ்வி ஜெய்ஷ்வால் தெரிவித்துள்ளார்.
16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 37ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நேற்று ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் தங்களது அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
ஜெய்ஷ்வால் முதல் பந்தில் இருந்தே தாக்குதல் ஆட்டமாடி சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். அதிரடிக்கு பெயர்போன ஜோஸ் பட்லர் ஒரு முனையில் அமைதியாக விளையாட இளம் வீரர் ஜெய்ஷ்வால் அவருக்கும் சேர்த்து அதிரடியாக விளையாடினார். அவருடைய ஷாட்கள் அதிரடியாக இருந்தது மட்டுமல்லாமல் கிளீனாகவும் இருந்தது.
Trending
தொடர்ந்து விளையாடிய ஜெய்ஸ்வால் அரை சதம் அடித்து, 43 பந்துகளில் எட்டு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 77 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தொடர்ந்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 170 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வி அடைந்தது. பவர் பிளேவில் ஜெய்ஷ்வால் அதிரடியாக விளையாடிய ஆட்டமே சென்னை அணியின் தோல்விக்கு முக்கியமான காரணமாக இருந்தது என்று கேப்டன் மகேந்திர சிங் தோனியே தற்பொழுது பேசியிருக்கிறார்.
ஆட்டநாயகன் விருது பெற்ற ஜெய்ஷ்வால் கூறுகையில், “நான் பந்தை அடித்து விளையாட முயற்சி செய்தேன். அதே சமயத்தில் மைதானத்தில் காற்று எந்த பக்கம் வீசுகிறது என்பதையும் உணர்ந்தேன். ஆனால் நான் நல்ல கிரிக்கெட் ஷாட்களை போய் விளையாட வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருந்தேன். இது இந்த சீசன் பற்றியது அல்ல. இதுகுறித்து அணி நிர்வாகத்துடன் சேர்ந்து நான் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன்.
தோனி சார், விராட் பாய் போன்ற சீனியர் வீரர்களிடம் தொடர்ந்து பேசுகிறேன். நான் அழுத்தத்தை என்ஜாய் செய்கிறேன். அழுத்தம் இருக்கும் பொழுது களத்தில் இருக்க விரும்புகிறேன். எனது ஸ்ட்ரைக் ரேட்டை அதிகமாக வைத்திருக்க வேண்டும் என்று மட்டுமே நினைத்தேன். இந்த விக்கெட்டில் தற்காத்துக் கொள்ள 200 ரன்கள் தேவை என்பது எனக்குத் தெரியும்” எனறு தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now