
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 270 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 47.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 271 ரன் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் தப்ரைஸ் ஷம்ஸி ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் போட்டி முடிவுக்கு பின், கடைசி நேரத்தில் நான் ஒரு பெரிய ஷாட் விளையாடி அது நடக்காமல் போயிருந்தால் நிச்சயம் என்னை சக வீரர்கள் ஓய்வறைக்குள் வர விட்டிருக்க மாட்டார்கள் என தப்ரைஸ் ஷம்ஸி தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய அவர், “உண்மையிலேயே இந்த போட்டியில் நான் செயல்பட்ட விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டியில் என்னுடைய பணி மிகவும் சிறப்பாக இருந்தது. ஏனெனில் துவக்கம் முதலே எங்களது அணியின் வீரர்கள் பாகிஸ்தான அணியை கட்டுப்படுத்தி வந்ததால் என்னால் சிறப்பாக பந்து வீச முடிந்தது.