
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்ற முடிந்தது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணியானது நேற்று நடைபெற்ற இந்த மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட்வாஷ் செய்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணியானது சிறப்பான ஆட்டத்தை விளையாடி அற்புதமாக துவங்கியது.
இருப்பினும் இடையே மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட்டதால் ஆட்டம் 36 ஓவர்கள் வரை மட்டுமே நடைபெற்றது. அப்படி 36 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழந்து 225 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் துவக்க வீரரான ஷிகார் தவான் 58 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 44 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.
ஆனால் இறுதிவரை ஆட்டமிடக்காமல் இருந்த மற்றொரு துவக்கவீரர் சுப்மன் கில் 98 பந்துகளில் 98 ரன்கள் குவித்து இருந்தார். பின்னர் தொடர்ந்து விளையாடிய வேஸ்ட் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 26 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.