
இந்திய அணியின் எதிர்காலத்தின் முக்கியமான இளம் வீரராக அறியப்படும் ஷுப்மன் கில் 2019ஆம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியிலும், 2020ஆம் ஆண்டில் இந்திய டெஸ்ட் அணிகளிலும் அறிமுகமானார். இதுவரை 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 579 ரன்களை எடுத்துள்ளார். ஒருநாள் சராசரி 57.9 ஆகும். இதில் 3 அரைசதம், 1 சதம் அடங்கும். அதிகபட்சமாக 130 ரன்களை எடுத்துள்ளார்.
அதேபோல் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி நான்கு அரைசதங்களுடன் 579 ரன்களையும் சேர்த்துள்ளார். இந்நிலையில் இவர் தாற்போது நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடும் இந்திய அணியிலும் இடம்பிடித்துள்ளார். இத்தொடரின் மூலம் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் அறிமுகமாகவுள்ளார்.
இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஷுப்மன் கில், தோனி 2004இல் வங்க தேசத்திற்கு எதிராக ரன்னேதும் எடுக்காமல் ரன் அவுட் ஆகியிருப்பார் என்பதை நினைவு கூறி ஒரு நெகிழ்ச்சி சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.