Advertisement
Advertisement
Advertisement

எல்எல்சி 2022: மைதானத்தில் மோதிக்கொண்ட யூசுப் - ஜான்சன் - வைரல் காணொளி!

யூசுப் பதான் மற்றும் மிட்சேல் ஜான்சன் ஆகியோர் மைதானத்தில் மோதிக்கொண்ட சம்பவம் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan October 03, 2022 • 17:16 PM
Yusuf Pathan, Mitchell Johnson Involved in Ugly On-Field Fight During Legends League Cricket
Yusuf Pathan, Mitchell Johnson Involved in Ugly On-Field Fight During Legends League Cricket (Image Source: Google)
Advertisement

லெஜன்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் பில்வாரா கிங்ஸ், இந்தியா கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே குவாலிபயர் ஆட்டம் ஜோத்பூரில் நேற்று நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற பில்வாரா கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி விளையாடிய அந்த அணியில் வில்லியம் போர்ட்டர்ஃபீல் 59, ஷேன் வாட்சன் 65, யூசுப் பதான் 48, பிஷ்னோய் 36 என ரன்களைக் குவித்து அசத்த, 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்களைச் சேர்த்தது.

Trending


இதையடுத்து இலக்கை துரத்திய இந்தியா கேப்பிட்டல்ஸ் அணியில் வழக்கம் போலா கேப்டன் கவுதம் காம்பீர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். பின் டுவைன் ஸ்மித், ஹாமில்டன் மஸகட்சா, தினேஷ் ராம்டின் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 

இதையடுத்து ஜோடி சேர்ந்த ராஸ் டெய்லர் - ஆஷ்லே நர்ஸ் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடக்க அணியின் வெற்றியும் உறுதியானது. 

இதனால் 19.3 ஓவர்களில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி இலக்கை எட்டியதுடன், 4 விக்கெட் வித்தியாசத்தில் பில்வாரா கிங்ஸை வீழ்த்தி அசத்தியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆஷ்லே நர்ஸ் 60 ரன்களையும், ராஸ் டெய்லர் 84 ரன்களையும் சேர்த்து வெற்றிக்கு உதவினர்.

இந்நிலையில் இந்த ஆட்டத்தின்போது, யூசுப் பதான் மற்றும் மிட்சேல் ஜான்சன் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பதான் மற்றும் ஜான்சன் முதலில் கடுமையான வார்த்தைப் போரில் ஈடுபட்டு மோதிக்கொண்டனர்.

 

அப்போது ஜான்சன் யூசுப் பதானைத் தள்ளினார். இதையடுத்து இருவரையும் பிரிக்க நடுவர்கள் தலையிட்டு பிரித்தனர். இவர்கள் மோதிக்கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் போட்டியின் போது சக வீரரைத் தாக்கியதான் காரணமாக மிட்செல் ஜான்சனுக்கு தடை விதிக்கவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement