தோனிக்கு கிடைத்த ஆதரவு மற்றவர்களுக்கு கிடைத்ததா? - யுவராஜ் சிங் சாடல்!
இந்திய கிரிக்கெட் அணியின் இளவரசன் என்று போற்றப்பட்ட யுவராஜ் சிங், தனது நண்பரான தோனி குறித்து விமர்சித்துள்ளார்.

தோனியுடன் விளையாடிய பலரும், தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ளனர். கம்பீர், சேவாக் , ஹர்பஜன் ஆகியோர் தோனியை தாக்கும் வகையில் சமீபத்தில் பேசி வந்தனர்.
தற்போது அந்த பட்டியலில் யுவராஜ் சிங்கும் வந்து சேர்ந்துவிட்டார். தோனி இந்திய அணிக்காக 350 ஒருநாள் போட்டியில் விளையாடியது எப்படி தெரியுமா என்று பேசியுள்ளார்.
Trending
தோனியுடன் கிரிக்கெட்டின் முடிவு காலத்தை பார்த்தாலே உங்களுக்கு தெரியும். அவருக்கு அணி நிர்வாகம், பயிற்சியாளர், கேப்டன் என ஒட்டுமொத்த ஆதரவும் அவருக்கு இருந்தது. இதனால் தான் தோனியால் 350 சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாட முடிந்தது. தோனியை 2019 உலககோப்பை தொடருக்கு எல்லாம் அழைத்து சென்றனர்.
ஒவ்வொரு வீரருக்கு இது போன்ற ஆதரவு கிடைப்பது மிகவும் முக்கியம். ஆனால் மற்ற வீரர்களுக்கு தோனிக்கு கிடைத்த ஆதரவு போல் கிடைக்கவில்லை. கம்பீர், ஹர்பஜன், லட்சுமணன், சேவாக் ஆகியோருக்கு எல்லாம் தலை மீது கத்தி தொங்கி கொண்டே இருந்தது. எப்போது வேண்டுமானாலும் அணியை விட்டு நீக்கப்படலாம் என்ற நிலை இருந்தது.
இது போன்ற ஒரு அழுத்தமான சூழலில் உங்களால் களத்தில் விளையாட முடியாது. இதை நான் சாக்காக சொல்லவில்லை. இதுவும் ஒரு காரணம் என்று சொல்கிறேன். 2011ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியின் சூழலே மாறிவிட்டது என்று யுவராஜ் சிங் பேசியுள்ளார். யவுராஜ் சிங்கின் இந்த பேச்சு ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தோனி உச்சத்தை தொட்டு விட்டதால் தற்போது அவருடன் விளையாடிய வீரர்களுக்கு எல்லாம் பொறாமை வந்து விட்டதாக குற்றஞ்சாட்டினர். யுவராஜின் தந்தை உயிருடன் இருக்கும் போது தினசரி தோனியை திட்டிவிட்டு தான் அன்றைய நாளையே தொடங்குவார். இதனால் இருவரின் நட்பும் விரிசல் அடைந்தது. தற்போது இருவரும் இணைந்து தொழில் செய்ய இருந்தனர். ஆனால் தற்போது யுவராஜ் சிங்கும் தோனிக்கு எதிராக திரும்பிவிட்டார்.
Win Big, Make Your Cricket Tales Now