ஐபிஎல் 2024: டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய யுஸ்வேந்திர சஹால்!
டி20 கிரிக்கெட்டில் 350 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் எனும் சாதனையை யுஸ்வேந்திர சஹால் படைத்து அசத்தியுள்ளார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில்இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் போரல் - ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இணை களமிறங்கினர்.
இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபிரேசர் மெக்குர்க் 19 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். ஆனால், 50 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அவர் விக்கெட்டையும் இழக்க, அடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப் மற்றும் அக்ஸர் படேல் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் போரல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
Trending
அதன்பின் அதிரடியாக விளையாடி அபிஷேக் போரல் 65 ரன்களிலும், ரிஷப் பந்த் 15 ரன்களில் பெவிலியன் திரும்ப அடுத்து களமிறங்கிய குல்பதீன் நைப் 19 ரன்களுக்கு விக்க்ர்ட்டை இழந்தார். ஆனாலும் இறுதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 41 ரன்களிலும், ரஷீக் சலாம் 9 ரன்களிலும் விக்கெட்டாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த டெல்லி 221 ரன்களை குவித்தது.
Yuzi Chahal becomes the First Indian bowler to take 350 T20 wickets! pic.twitter.com/dZgC0AZQWu
— CRICKETNMORE (@cricketnmore) May 7, 2024
ராஜஸ்தான் அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், யுஸ்வேந்திர சாஹல், சந்தீப் சர்மா, டிரெண்ட் போல்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்நிலையில் இப்போட்டியில் யுஸ்வேந்திர் சஹால், ரிஷப் பந்த் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் தனது 350ஆவது விக்கெட்டை கைப்பற்றினார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 350 விக்கெட்டுகளை கைப்பற்றி முதல் வீரர் எனும் சதனையை படைத்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now