
ஐபிஎல் 16ஆவது சீசனில் இன்று ஹைதராபாத்தில் நடந்துவரும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் புவனேஷ்வர் குமார் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் டாப் 3 வீரர்களான ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய மூவரும் அரைசதம் அடித்தனர். அதிரடியாக பேட்டிங் ஆடி 20 பந்தில் அரைசதம் அடித்த பட்லர் 22 பந்தில் 54 ரன்கள் அடித்தார். ஜெய்ஸ்வால் 37 பந்தில் 54 ரன்களும், சாம்சன் 32 பந்தில் 55 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 203 ரன்களை குவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
204 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் ராஜஸ்தான் ரயால்ஸ் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் யுஸ்வேந்திர சஹால் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.