
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளராக வலம் வருபவர் யுவேந்திர சாஹல். ஃபார்ம் அவுட்டில் இருந்து வந்த சாஹல், ஐபிஎல் தொடர் மூலம் கம்பேக் கொடுத்து தற்போது ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளார்.
தனது வேடிக்கையான செயல்கள் மற்றும் போஸ்களால் ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்த யுவேந்திர சாஹல் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடன கலைஞரான தனஸ்ரீ வெர்மாவை கரம்பிடித்தார். இருவரும் சேர்ந்து நடமாடும் டிக்டாக் காணொளிகள் அடிக்கடி இணையத்தில் ட்ரெண்டிங் ஆவது வழக்கம். இதன் மூலம் பிரபலமான ஜோடிகளில் ஒன்றாக இடம்பிடித்தனர்.
இந்நிலையில் இவர்கள் இருவருக்குள்ளும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியானது. இருவரும் நீதிமன்றத்தில் விவாகரத்திற்காக ரகசியமாக முறையீடு செய்துள்ளதாகவும், விரைவில் பிரியவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் இருவரின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் அமைந்துள்ளது.