
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளராக கடந்த தசாப்தத்தில் இருந்தவர் யுவேந்திர சாஹல். கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் தடுமாறி வரும் அவர், தற்போது உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடர்களில் மட்டும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். தனது வேடிக்கையான செயல்கள் மற்றும் போஸ்களால் ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்த யுவேந்திர சாஹல் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடன கலைஞரான தனஸ்ரீ வெர்மாவை கரம்பிடித்தார்.
இருவரும் சேர்ந்து நடமாடும் டிக்டாக் காணொளிகள் அடிக்கடி இணையத்தில் ட்ரெண்டிங் ஆவது வழக்கம். இதன் மூலம் கிரிக்கெட் வட்டாரத்தில் பிரபலமான ஜோடிகளில் ஒன்றாக இடம்பிடித்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்போது விவாகரத்து பெறவுள்ளதாக சமூக வலைதளங்களில் சில தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இதற்கு முன்னரும் இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக பலமுறை வதந்திகள் வெளியாகி அது பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் யுஸ்வேந்திர சஹாலின் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று அவரது விவாகரத்தை உறுதிபடுத்துவது போல் அமைந்துள்ளது. அதன்படு சஹாலின் பதிவில், "கடின உழைப்பு மக்களின் தன்மையை வெளிப்படுத்துகிறது. உங்கள் பயணம் உங்களுக்குத் தெரியும். உங்கள் வலி உங்களுக்குத் தெரியும். நீங்கள் இங்கு வருவதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்” என்ற பதிவை வெளியிட்டுள்ளார்.