
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்திய அணி கைப்பற்றியது.
இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதலாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதன் மூலம் 1-0 என தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலையில் உள்ளது.
இவ்விரு அணிகள் இடையிலான 2ஆவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள யுஸ்வேந்திர சாஹல் முதல் டி20 போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் டி20 கிரிக்கெட்டில் முதல் இந்திய வீரராக மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்த காத்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.