ஆசிய கோப்பையில் இடமில்லை; மௌனத்தை கலைத்த சஹால்!
எதிர்வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் யுஸ்வேந்திர சஹலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய விடியலுக்கு தான் காத்திருப்பதை எமோஜிக்களை பயன்படுத்தி ட்வீட் மூலம் குறிப்பால் அவர் உணர்த்தியுள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால். தற்போது 33 வயதாகும் சஹால், கடந்த 2016 முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 72 ஒருநாள் மற்றும் 75 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தமாக 217 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். இதில் 121 விக்கெட்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் வீழ்த்தியவை.
இந்திய அணியில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்த சஹால், கடைசியாக கடந்த ஜனவரியில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருந்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை கைப்பற்றி பவுலராக அறியப்படுகிறார். 145 போட்டிகளில் விளையாடி 187 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 5 சீசனில் 20+ விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். அண்மையில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸுக்கு அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி இருந்தார்.
Trending
Will the sun rise again for Yuzi Chahal?#AsiaCup2023 #IndianCricket #TeamIndia #RohitSharma #Chahal pic.twitter.com/T7HXKaR0IF
— CRICKETNMORE (@cricketnmore) August 21, 2023
இந்நிலையில், ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம் பெறவில்லை. இந்த சூழலில் அஸ்தமிக்கும் சூரியன் நிச்சயம் உதிக்கும் என்பதை குறிக்கும் வகையில் எமோஜியை அவர் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் சஹாலின் ட்விட்டர் பதிவானது இணையத்தில் வைரால்கி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now