
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் பிளேயிங் லெவனை டாஸ் நிகழ்வின்போது அறிவித்த கோலி, இந்த போட்டியில் அஸ்வின் விளையாடவில்லை என்றும் ஜடேஜா தான் விளையாடுகிறார் என்று கூறியதும் பல ரசிகர்களுக்கு ஷாக்காக அமைந்தது.
அதுமட்டுமின்றி கோலியின் இந்த முடிவு குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமின்றி வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவிற்கு பதிலாக சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோரையும் கோலி தேர்வு செய்திருந்தார். கோலியின் இந்த முடிவுகள் விமர்சனத்தை பெற்று இருந்தாலும் தற்போது முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெறும் அளவிற்கு நல்ல நிலையில் வந்து முடிந்துள்ளன.
இந்நிலையில் அஸ்வின் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வந்திருந்த போதும் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் அவருக்கு பதிலாக ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைத்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஆனால் இப்படி இன்னல்களை எல்லாம் மீறி வாய்ப்பு பெற்ற ஜடேஜா முதல் இன்னிங்சில் 3 ஓவர்கள் மட்டுமே வீசினாலும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு 86 பந்துகளில் 56 ரன்கள் குவித்து தனது திறனை வெளிப்படுத்தினார்.