
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாள ஜாகீர் கான். இவர் இந்திய அணிக்காக கடந்த 2000ஆம் ஆண்டு அறிமுகமாகி, 2014ஆம் ஆண்டு வரை விளையாடினார். அதன்பின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த அவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக இருந்து வந்தார். இந்நிலையில் எதிவரும் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணிக்காக இதுவரை 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஜாகீர் கான் 311 விக்கெட்டுகளையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 200 போட்டிகளில் விளையாடி 282 விக்கெட்டுகளையும், 17 டி20 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேற்கொண்டு ஐபிஎல் தொடரில் 2008 முதல் 2017ஆம் ஆண்டு வரை விளையாடிய ஜாகீர் கான் 100 போட்டிகளில் விளையாடி 102 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நவீன கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களை இந்திய ஜாம்பவான் ஜாகீர் கான் தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளார். அதில் முதலாவதாக இந்திய அணியின் தற்போதைய நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ராவை அவர் சிறந்த பந்துவீச்சாளர் என்று அறிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து முகமது ஷமி, தென் ஆப்பிரிக்காவின் காகிசோ ரபாடா, ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹசில்வுட், பாட் கம்மின்ஸையும் அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.