ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக ஜாகீர் கான் நியமனம்?
எதிர்வரும் ஐபிஎல் 18ஆவது சீசனுக்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது தங்கள் அணியின் ஆலோசகராக முன்னாள் இந்திய வீரர் ஜாகீர் கானை நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலமும் இந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனால் இந்த ஏலத்தில் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் மற்றும் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு தற்போதில் இருந்தே ஐபிஎல் அணிகள் பணிகளை மேற்கொண்டு பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அணியின் பயிற்சியாளர்களை மற்றுதல், புதிய பயிற்சியாளர்களை நியமித்தல், வீரர்களை ஒப்பந்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஐபிஎல் அணிகள் மும்முரமாக இறங்கியுள்ளனர். அதன் ஒருபகுதியாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் தங்கள் பணிகளை செய்துவருகிறது.
Trending
அதன்படி, எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானை அணியின் அலோசகராக நியமிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க இரு சீசன்களிலும் பணியாற்றிவந்த நிலையில், கடந்த சீசனில் அவர் அணியில் இருந்து விலகி கேகேஆர் அணில் இணைந்தார்.
இந்நிலையில்,லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லக்னோ அணி நிர்வாகம் விரைவில் வெளியிடும் என்றும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேற்கொண்டு அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மோர்னே மொர்க்கல் தற்சமயம், இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் குறித்த அறிவிப்பையும் விரையில் வெளிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் தற்போதைய பயிற்சியாளர்கள் இடத்தில் தலைமை பயிற்சியாளராக ஜஸ்டின் லங்கரும், துணை பயிற்சியாளர்களாக ஆடம் வோஜஸ், லான்ஸ் க்ளூஸ்னர், ஜான்டி ரோட்ஸ், ஸ்ரீதரன் ஸ்ரீராம் மற்றும் பிரவின் டாம்பே ஆகியோரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
இந்திய அணிக்காக கடந்த 2000ஆம் அண்டு அறிமுகமான ஜாகீர் கான் 2014ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். இதற்கிடைப்பட்ட காலத்தில் அவர் 92 டெஸ்ட், 200 ஒருநாள் மற்றும் 17 டி20 போட்டிகளில் விளையாடி 600க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். மேற்கொண்டு ஐபிஎல் தொடரிலும் 100 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 102 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now