
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நேற்று ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் ஆரம்பித்து, மிகவும் சிறப்பான முறையில் செல்கிறது. இந்த நிலையில் இன்று பாகிஸ்தான் அணி ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நெதர்லாந்து அணியை தனது முதல் போட்டியில் சந்திக்க இருக்கிறது.
இந்திய அணி நாளை மறுநாள் அக்டோபர் எட்டாம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பல பரிட்சை நடத்த இருக்கிறது. தற்போது இந்த போட்டியில் இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாக இளம் வீரர் ஷுப்மன் கில் டெங்கு பாதிப்பு அடைந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் உலகக்கோப்பை முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட மாட்டார் என்றும் தெரிய வருகிறது.
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தில் எப்படியான அணியை கொண்டு சென்றால் ஆஸ்திரேலிய எளிதில் வெல்ல முடியும் என்று, இந்திய அணியின் முன்னாள் லெஜன்ட் வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் தன்னுடைய பார்வையை முன் வைத்திருக்கிறார்.