
நாளை ஆசியக்கோப்பை இரண்டாவது சுற்றில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் தங்களின் கடைசிப் போட்டியை விளையாட இருக்கின்றன. இந்தப் போட்டியில் யார்? வெல்கிறார்களோ அவர்கள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று, இந்திய அணிக்கு எதிராக மோதுவார்கள். ஒருவேளை இந்தப் போட்டியில் மழையால் நடைபெறாமல் டிராவானால் ரன் ரேட் அடிப்படையில் இலங்கை அணி இந்த முறையும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
இந்த இரண்டு அணிகளுமே தங்களுடைய கடைசி போட்டியில் இந்திய அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருக்கின்றன. தோல்வி முகத்தில் இருந்து வாழ்வா? சாவா? போட்டியில் நாளை இரு அணிகளுமே மோதுகின்றன. பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை எடுத்துக் கொண்டால், அந்த அணியின் மிகப்பெரிய பலமாக அவர்களின் பாஸ்ட் பவுலிங் யூனிட் மற்றும் கேப்டன் பாபர் அசாமின் பேட்டிங் இருக்கிறது.
இந்தியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் இந்த இரண்டுமே பலிக்காமல் போனது. மேலும் 228 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது. இதில் மிகக் குறிப்பாக பாகிஸ்தான் அணியின் அதிவேக பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுப் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாதியில் பந்து வீச வரவில்லை. அதேபோல் தோள்பட்டை வலியால் நசீம் ஷா ஆட்டத்தின் இரண்டாம் பகுதியில் பேட்டிங் செய்ய வரவில்லை.