
கிரிக்கெட் எப்போதுமே பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. டெஸ்ட் போட்டி, ஒரு நாள் போட்டி ,டி20 போட்டி என தனது வடிவத்தை மாற்றிக்கொண்ட கிரிக்கெட் தற்போது பத்து ஓவர் போட்டிகளாக நடைபெறுகிறது. ஏற்கனவே அபுதாபி உள்ளிட்ட நாடுகளில் பத்து ஓவர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த வரிசையில் தற்போது இணைந்து இருக்கிறது ஜிம்பாப்வே கிரிக்கெட். ஜிம்பாவே கிரிக்கெட் பொருளாதார வகையில் மிகவும் பின்தங்கி இருக்கிறது. ஐசிசி கொடுக்கும் உதவித்தொகை வைத்து அந்த அணி வீரர்கள் தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஜிம்பாப்வேவில் அதிக அளவு கிரிக்கெட் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் கிரிக்கெட்டை மேலும் கவர்ச்சிகரமாக கொண்டு செல்ல ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் டென் டி குளோபல் ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து ஒரு புதிய தொடரை நடத்துகிறது. இதற்கு ஜிம் ஆப்ரோ டீ டன் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஐந்து அணிகள் பங்கேற்கின்றன.
ஹராரே ஹரிக்கன்ஸ், ஜோபர்க் பப்லோஸ், டர்பன் குவாண்டர்ஸ்,கேம்ப் டவுன் சாம்ப் ஆர்மி என்று ஐந்து அணிகள் பங்கேற்கிறது. இது தொடரின் முதல் போட்டி வரும் இருபதாம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடருக்கான வீரர்கள் தேர்வு வரும் ஜூலை இரண்டாம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரின் ஒவ்வொரு அணியிலும் 16 வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.