
ZIM vs AFG, 1st ODI: Afghanistan win the first ODI by 60 runs (Image Source: Google)
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஃப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஹராரேவில் இன்று தொடங்கியது.
இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி ஆஃப்கானிஸ்தனை பேட்டிங் செய்யுமாறு அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியில் இப்ராஹிம் ஸத்ரான் 5 ரன்களிலும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 17 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ரஹ்மத் ஷா - கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தடுதுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தியது.