
இந்திய அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி ஒருநாள் தொடரை 2-0 என வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்துவருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ராகுல் திரிபாதி ஆகிய இருவருக்கும் அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் இருவருக்கும் இந்த போட்டியிலும் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் மந்தமாக தொடங்கினர். இருவரில் ஒருவர் கூட அதிரடியாக ஆடவில்லை. ராகுல் 46 பந்தில் 30 ரன்கள் மட்டுமே அடித்தார். 68 பந்துகள் பேட்டிங் விளையாடி ஷிகர் தவான் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.