
ஜிம்பாப்வே vs இந்தியா, ஐந்தாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Google)
Zimbabwe vs India, 5th T20I Dream11 Prediction: ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றிபெற்ற நிலையில், அடுதடுத்த மூன்று போட்டிகளிலும் இந்திய அணியும் வெற்றியைப் பதிவுசெய்து டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே ஜிம்பாப்வே அணி தொடரை இழந்துள்ள நிலையில், இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ZIM vs IND 5th T20I: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ஜிம்பாப்வே vs இந்தியா
- இடம் - ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானம், ஹராரே
- நேரம் - ஜூலை 14, மாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)
ZIM vs IND 5th T20I Pitch Report