
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் ஜிம்பாப்வே அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றியைப் பதிவுசெய்து டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் தொடரை சமனில் வைத்துள்ளனர். இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது இன்று ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் இப்போட்டியாக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் இப்போட்டிக்கான இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
இந்திய அணி
ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி இத்தொடரின் முதல் டி20 போட்டியில் தோல்வியைத் தழுவினாலும், இரண்டாவது போட்டியில் அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக முதல் போட்டியில் சொதப்பிய அபிஷேக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளன. இதன் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளிலும் இந்திய அணி அபாரமான வெற்றிகளைப் பதிவுசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.