
ZIM vs IRE 1st T20I: Zimbabwe go 1-0 up in the series with a convincing win! (Image Source: Google)
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று ஹராரேவில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஆண்டி பார்ல்பிர்னி, ரோஸ் அதிர் ஆகியோர் தலா 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
அதன்பின் களமிறங்கிய ஹாரி டெக்டர் 5, ஸ்டீபன் தொஹனி 15, கர்டிஸ் காம்பெர் 20, ஜார்ஜ் டக்ரெல் 9, டெலானி 24 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நடையைக் கட்டினர். இதனால் 19.2 ஓவர்களிலேயே அயர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்களை மட்டுமே எடுத்தது. ஜிம்பாப்வே தரப்பில் ரியான் பார்ல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.