ZIM vs IRE, Test: தோல்வியைத் தவிர்க்க போராடும் ஜிம்பாப்வே; வெற்றி யாருக்கு?
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களைச் சேர்த்துள்ளது.
![ZIM vs IRE, Test: Ireland in control going into the final day of the Bulawayo Test! ZIM vs IRE, Test: தோல்வியைத் தவிர்க்க போராடும் ஜிம்பாப்வே; வெற்றி யாருக்கு?](https://img.cricketnmore.com/uploads/2025/02/ZIM-vs-IRE,-Test-Ireland-in-control-going-into-the-final-day-of-the-Bulawayo-Test!-mdl.jpg)
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி புலவாயோவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஜிம்பாப்வே அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆண்டி மெக்பிரைன் 12 பவுண்டரிகளுடன் 90 ரன்களையும், மார்க் அதிர் 13 பவுண்டரிகளுடன் 78 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதன்மூலம் அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.ஜிம்பாப்வே தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய பிளெஸிங் முஸரபானி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
Trending
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணியிலும் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறினர். இதில் மூன்றாம் வரிசையில் களமிறங்கிய நிக் வெல்ச் அபாரமாக விளையாடி 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 90 ரன்களையும், பிளெஸிங் முஸரபானி 47 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதன் காரணமாக ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அயர்லாந்து தரப்பில் பேரி மெக்கர்த்தி 4 விக்கெட்டுகளையும், ஆண்டி மெக்பிரைன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன்பின் 7 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய அயர்லாந்து அணியில் பீட்டர் மூர் 30 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர் களமிறங்கிய கர்டிஸ் காம்பெர் 39 ரன்களிலும், ஆண்ட்ரூ பால்பிர்னி 66 ரன்களிலும், லோர்கன் டக்கர் 58 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் ரன்கள் சேர்க்க தவறினர். இதனால் அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 298 ரன்களைச் சேர்த்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் ரிச்சர்ட் ந்ங்கரவா 4 விக்கெட்டுகளையும், ட்ரெவர் குவாண்டு, வெஸ்லி மதவரே தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன்மூலம் ஜிம்பாப்வே அணிக்கு 292 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணியில் பென் கரண் 4 ரன்னிலும், கைடானோ, நிக் வெல்ச் 5 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் ஜிம்பாப்வே அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 38 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை பிரையன் பென்னட் 15 ரன்களுடனும், ட்ரெவர் குவாண்டு ரன்கள் ஏதுமின்றியும் இன்னிங்ஸை தொடங்கினர். இதில் குவாண்டு 2 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின் அரைசதத்தை நெருங்கிய் பிரையன் பென்னட்டும் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த வெஸ்லி மதவரே - கேப்டன் காம்பெல் இணை பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் காம்பெல் 33 ரன்களில் விக்கெட்டை இழக்க, மதவரே தனது அரைசதத்தைப் பதிவுசெய்துள்ளார். இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் வெஸ்லி மதவரே 61 ரன்களுடனும், நியூமன் 5 ரன்னிலும் என களத்தில் உள்ளனர். இதனையடுத்து 109 ரன்கள் எடுத்தால் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி விளையாடவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now