
ZIM vs NZ, 1st Test: ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் நியூசிலாந்து அணியின் கேப்டனாக அனுபவ ஆல் ரவுண்டர் மிட்செல் சான்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 30) புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டி முன்னதாக நியூசிலாந்து அணி பின்னடைவைச் சந்தித்துள்ளது. அந்த அணியின் கேப்டன் டாம் லேதம் காயம் காரணமாக முதல் டெஸ்டில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் பர்மிங்ஹாம் அணிக்காக டி20 போட்டியில் விளையாடிய போது டாம் லேதம் காயத்தைச் சந்தித்ததாகவும், அவர் தற்போது வரையிலும் தனது காயத்தில் இருந்து குணமடைவில்லை என்றும் கூறப்படுகிறது.