ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டி20 போட்டி டிசம்பர் 7ஆம் தேதி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்த நிலையில் ஜிம்பாப்வே அணி கடைசி பந்தில் ஒரு விக்கெட் மட்டுமே எஞ்சிய நிலையில் திரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் தற்போது பரபரப்பு சம்பவம் ஒன்று நடைபெற்றிருக்கிறது. அதில் ஜிம்பாப்வே அணி கேப்டன் சிக்கந்தர் ராஸா பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அயர்லாந்து வீரர் ஜாஸ் லிட்டில் மற்றும் கோர்டீஸ் கேம்பர் ஆகியோருடன் மோதலில் ஈடுபட்டு இருக்கிறார். அப்போது இருவரும் எல்லையற்ற முறையில் திட்டிக் கொண்டிருந்தார்கள்.
ஒரு கட்டத்திற்கு மேல் சிக்கந்தர் ரஸா தன்னுடைய பொறுமையை இழந்து பேட்டால் அயர்லாந்து வீரர்களை அடிக்கச் சென்றார். அப்போது அங்கு இருந்த நடுவர் சிக்கந்தர் ரஸாவை தடுத்து அழைத்துச் சென்றார். சிக்கந்தர் ரஸாவின் இந்த செயலால் கடுப்பான மற்றொரு அயர்லாந்து வீரர் சிக்கந்தர் ரஸா வை அடிக்க சென்றார். அப்போது மற்றொரு நடுவர் இருவரையும் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றார்.