
ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இந்தத் தொடர் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், போட்டியை நடத்தும் இந்தியா உள்பட 8 அணிகள் பிரதான சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெற்றுவிட்டன. எஞ்சியிருக்கும் 2 இடங்களுக்கான அணிகள் தகுதிச்சுற்று ஆட்டங்கள் மூலம் முடிவு செய்யப்படவுள்ளன.
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றுகள் முடிந்துள்ள நிலையில் இன்று முதல் சூப்பர் 6 சுற்றுகள் ஆரம்பமாகிறது. அதன்படி இன்று நடைபெற்ற சூப்பர் 6 சுற்றின் முதல் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் கும்பி மற்றும் கேப்டம் கிரேக் எர்வின் இணை தொடக்கம் கொட்த்தனர். இதில் கும்பி 21 ரன்களிலும், கிரேக் எர்வின் 25 ரன்களிலும் என ஆட்டமிழக்க, அடுத்து வந்த மதவேராவும் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த சீன் வில்லியம்ஸ் - சிக்கந்தர் ரஸா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.