Advertisement

போதை மருந்து பயன்படுத்திய இரு வீரர்கள் விளையாட தடை; ஜிம்பாப்வே கிரிக்கெட் அதிரடி!

தடை செய்யப்பட்ட போதைப்பொருளை பயன்படுத்தியதாக வெஸ்லி மதவெரே மற்றும் பிராண்டன் மவுடா இருவருக்கும் நான்கு மாத கிரிக்கெட் விளையாட தடைவிதித்து ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement
போதை மருந்து பயன்படுத்திய இரு வீரர்கள் விளையாட தடை; ஜிம்பாப்வே கிரிக்கெட் அதிரடி!
போதை மருந்து பயன்படுத்திய இரு வீரர்கள் விளையாட தடை; ஜிம்பாப்வே கிரிக்கெட் அதிரடி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 25, 2024 • 03:41 PM

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்தவர் வெஸ்லி மாதவெரே. இவர் கடந்த 2020ஆம் ஆண்டு ஜிம்பாப்வே கிரிக்கெட்டில் அறிமுகமாகி இதுவரை 36 டெஸ்ட், 60 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 26 விக்கெட்டுகளையும், 1700க்கும் மேற்பட்ட ரன்களையும் எடுத்துள்ளார். அதேபோல் பிராண்டன் மவுடா ஜிம்பாப்வே அணிக்காக ஜிம்பாப்வே அணிக்காக 26 சர்வதேச போட்டிகளில் விலையாடி 26 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
January 25, 2024 • 03:41 PM

இந்நிலையில் கடந்தாண்டு வெஸ்லி மதவெரே மற்றும் பிராண்டன் கிங் இருவரும் தடை செய்யப்பட்ட போதை மருந்தை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் முடிவில் அவர்கல் போதை மருந்தை பயன்படுத்தியது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவர்கள் இருவரும் ஜிம்பாப்வே கிரிக்கெட்டிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

Trending

இந்நிலையில் இன்று அவர்கள் இருவருக்கான தண்டனையை ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி வெஸ்லி மதவெரே மற்றும் பிராண்டன் மவுடா இருவருக்கும் நான்கு மாத கிரிக்கெட் விளையாட தடைவிதிக்கப்படுவதாகவும், 2024 ஜனவரி மாதம் முதல் மூன்று மாத கட்டணத்திலிருந்து 50 சதவீத தொகை அபராதமாக விதிக்கப்படுவதாகும், மேலும் அவர்களுக்கு இறுதியான எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும், அவர்கள் இருவரும் ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் மருத்துவர்கள் அடங்கிய மறுவாழ்வு மையத்திற்கு செல்லவேண்டும் என்று ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் உட்கொள்வதை ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் ஒருபோதும் அனுமதிக்காது. போதைப்பொருள் உட்கொள்வது ஒரு கடுமையான குற்றமாகும். ஆனால் இரு வீரர்களின் அத்துமீறலால் இது ஒட்டுமொத்த அமைப்புக்கும் கிரிக்கெட் விளையாட்டிற்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.  என்றும் ஒழுங்குக் குழு கருதியது.

இருப்பினும் வீரர்களின் கருத்துகளை நாங்கள் கேட்டறிந்துள்ளோம். அவர்கள் செய்த தப்பிற்காக வருத்தம் தெரிவித்ததுடன், ஏற்கெனவே அப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்காக மறுவாழ்வு மையத்தை அணுகி சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளது. போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக இரு வீரர்கள் தடைசெய்யப்பட்டுள்ள நிகழ்வு ஜிம்ப்பாப்வே கிரிக்கெட்டில் மட்டுமின்றி, சர்வதேச கிரிக்கெட்டிலும் சில சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement