
ஜிம்பாப்வே அணி சமீபத்தில் அயர்லாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடியது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணியானது 63 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி வெற்றிபெற்றது.
அதன்பின் நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஜிம்பாப்வே அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் ஜிம்பாப்வே அணியானது 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதில் ஒருநாள் தொடரின் முதல் மற்றும் மூன்றாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜிம்பாப்வே அணி அடுத்ததாக வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி சில்ஹெட்டில் ஏப்ரல் 20ஆம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் ஏப்ரல் 28ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது.