
Zimbabwe have taken a 1-0 lead in the series against Ireland (Image Source: Google)
அயர்லாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசியது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி கேப்டன் கிரேக் எர்வின், சிக்கந்தர் ரஸா ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்களைச் சேர்த்தது. இதில் கிரேக் எர்வின் 64 ரன்களையும், சிக்கந்தர் ரஸா 59 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு வில்லியம் போட்டர்ஃபீல்ட் - பால் ஸ்டிர்லிங் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் ஸ்டிர்லிங் 32 ரன்களில் ஆட்டமிழக்க, போட்டர்ஃபீல்ட் 75 ரன்களில் ஆட்டமிழந்தார்.