Advertisement
Advertisement
Advertisement

டிராவில் முடிந்த ஜிம்பாப்வே - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்; சந்தர்பாலுக்கு ஆட்டநாயகன் விருது!

ஜிம்பாப்வே - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி முடிவு எட்டப்படாமல் டிராவில் முடிவடைந்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 08, 2023 • 22:59 PM
Zimbabwe hold off late West Indies charge to draw first Test!
Zimbabwe hold off late West Indies charge to draw first Test! (Image Source: Google)
Advertisement

ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான பயிற்சி போட்டி டிராவில் முடிந்த நிலையில், தற்போது இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியில் டேகனரின் சந்தர்பால் மற்றும் பிராத்வெயிட் இருவரும் முதலில் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 336 ரன்கள் குவித்தது. சந்தர்பால் 207 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார். பிராத்வெயிட் 182 ரன்கள் எடுத்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி ஜிம்பாப்வே சுற்றுபயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு நாடுகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன் அடிப்படையில், தொடக்க வீரராக தேஜ்நரின் சந்தர்பாலும், பிராத்வெயிட்டும் களமிறங்கினர்.  

Trending


முதல் விக்கெட்க்கு சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 336 ரன்கள் குவித்தனர். சந்தர்பால் 207 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார். பிராத்வெயிட் 182  ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 143 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 447 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் இன்னசண்ட் கையே 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதற்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்காக விளையாடிய கேரி பேலன்ஸ் முதல்முறையாக ஜிம்பாப்வே அணிக்காக டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். கேரி பேலன்ஸ் தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார்.

அவர் சதம் அடித்ததன் மூலமாக இரு நாடுகளுக்காக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 2ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்னதாக தென் ஆப்பிரிக்காவின் கெப்லர் வெசல்ஸ் இந்த சாதனையை படைத்திருந்தார். கெப்லர், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஆஸ்திரேலியாவுக்காக 4 சதமும், தென் ஆப்பிரிக்காக 2 சதமும் அடித்துள்ளார் எனப்து குறிப்பிடத்தக்கது.

கெப்லரைப் போன்று கேரி பேலன்ஸ் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 4 சதங்களும், ஜிம்பாப்வே அணிக்காக ஒரு சதமும் அடித்துள்ளார். இன்னும் 2 சதங்கள் அடித்தால் 2 நாடுகளுக்காக டெஸ்ட் போட்டியில் பங்கேற்று அதிக டெஸ்ட் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

இந்தப் போட்டியில் கேரி பேலன்ஸ் 137 ரன்கள் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஜிம்பாப்வே அணி 125 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 379 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 5 ஆம் நாளான இன்று வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்தது. இதில் அதிகபட்சமாக ரெய்ஃபெர் 58 ரன்களையும், பிளாக்வுட் 57 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் ஜிம்பாப்வே அணிக்கு 271 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

கடைசி நாளின் உணவு இடைவேளைக்கு பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் மகோனி 9 ரன்களில் ஆட்டமிழக்க, இன்னசெண்ட் கையா 24, சிபாபா 31, கிரெய்க் எர்வின் 17, கேரி பேலன்ஸ் 18 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் பின்ன வந்த வீரர்கள் எதிரணி பந்துவீச்சை சமாளித்து விக்கெட் இழப்பை தடுத்தனர்.

இதனால் 5ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களைச் சேர்த்து ஆட்டத்தை சமன்செய்தது. இதன்மூலம் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இப்போட்டியில் இரட்டை சதமடித்து அசத்திய டேகனரின் சந்தர்பால் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement