ஜிம்பாப்வே தொடருக்கான அயர்லாந்து அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடும் அயர்லாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அயர்லாந்து அணி எதிவரும் பிப்ரவரி மாதம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது. அதன்படி ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்று மூன்று டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பிப்ரவரி 14ஆம் தேதி முதலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது பிப்ரவரி 22ஆம் தேதி முதலும் நடைபெற்வுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறும் நிலையில், ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் ஹராரேவில் நடைபெறவுள்ளது.
Trending
இந்நிலையில் ஜிம்பாப்வே தொடருக்கான அயர்லாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதில் டெஸ்ட் அணியின் கேப்டனாக ஆண்ட்ரூ பால்பிர்னி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக பால் ஸ்டிர்லிங் தொடர்கிறார். மேற்கொண்டு இத்தொடருக்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் அறிமுக வீரர் மோர்கன் டாப்பிங் சேர்க்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு கவின் ஹோயும் டெஸ்டில் அறிமுகமாகவுள்ளார்.
இதுதவிர்த்து கரேத் டெலானி மற்றும் பேரி மெக்கார்த்தி ஆகியோர் காயங்களில் இருந்து மீண்டு அயர்லாந்து அணிக்கு திரும்பியுள்ளார். இதுதவிர்த்து மார்க் அதிர், கர்டிஸ் காம்பெர், ஜோஷுவா லிட்டில், ஹேரி டெக்டர், லோர்கன் டக்கர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுக்கும் தங்கள் இடங்களை தக்கவைத்துள்ளனர். இதனையடுத்து இம்மாத இறுதியில் அயர்லாந்து அணி துபாய் சென்று பயிற்சியில் ஈடுபடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்து டெஸ்ட் அணி: ஆண்ட்ரூ பால்பிர்னி (கே), மார்க் அடேர், கர்டிஸ் கேம்பர், கவின் ஹோய், கிரஹாம் ஹியூம், மேத்யூ ஹம்ப்ரேஸ், ஆண்ட்ரூ மெக்பிரைன், பேரி மெக்கார்த்தி, பிஜே மூர், பால் ஸ்டிர்லிங், ஹாரி டெக்டர், மோர்கன் டாப்பிங், லோர்கன் டக்கர், கிரேக் யங்.
அயர்லாந்து ஒருநாள் அணி: பால் ஸ்டிர்லிங் (c), மார்க் அடேர், ஆண்ட்ரூ பால்பிர்னி, கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், கவின் ஹோய், கிரஹாம் ஹியூம், மேத்யூ ஹம்ப்ரேஸ், ஜோஷுவா லிட்டில், ஆண்ட்ரூ மெக்பிரைன், பேரி மெக்கார்த்தி, ஹாரி டெக்டர், மோர்கன் டாப்பிங், லோர்கன் டக்கர், கிரேக் யங்.
Also Read: Funding To Save Test Cricket
அயர்லாந்து டி20 அணி: பால் ஸ்டிர்லிங் (c), மார்க் அடேர், ரோஸ் அடேர், கர்டிஸ் கேம்பர், கரேத் டெலானி, ஜார்ஜ் டோக்ரெல், கிரஹாம் ஹியூம், மேத்யூ ஹம்ப்ரேஸ், ஜோஷ் லிட்டில், பேரி மெக்கார்த்தி, நீல் ராக், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், பென் ஒயிட்.
Win Big, Make Your Cricket Tales Now