
Zimbabwe vs Sri Lanka 2nd T20 Match Prediction: இலங்கை அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் இலங்கை அணி இரண்டிலும் வெற்றி பெற்று தொடரை வென்றது.
இதனையடுத்து நடைபெற்று வரும் டி20 தொடரின் முதல் போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்று அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே முதல் போட்டியில் வென்ற உத்வேகத்துடன் இலங்கை அணி விளையாடவுள்ளது. மறுபக்கம் முதல் போட்டியில் தோல்வியடைந்த கையோடு ஜிம்பாப்வே அணி டி20 தொடரில் கம்பேக் கொடுக்க முயற்சி செய்யும். இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
ZIM vs SL 2nd T20: Match Details
- மோதும் அணிகள் - ஜிம்பாப்வே vs இலங்கை
- இடம் - ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானம், ஹராரே
- நேரம்- செப்டம்பர் 06, மாலை 5 மணி (இந்திய நேரப்படி)