
Zimbabwe's Sean Williams to step away from international cricket: Report (Image Source: Google)
ஜிம்பாப்வே அணி ஐயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இத்தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இத்தொடருக்கான ஜிம்பாப்வே அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் அந்த அணியின் அனுபவ வீரரான சீன் வில்லியம்ஸ் ஜிம்பாப்வேயின் ஒருநாள் அணியில் மட்டுமே இடம்பிடித்திருந்தார்.
மேலும் ஜிம்பாப்வே டெஸ்ட் அணியின் கேப்டனான இவர், டி20 தொடருக்கான அணியில் இடம்பெறாததால், ஐயர்லாந்து அணியுடனான தொடர் முடிந்ததும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர்.