வங்கதேசம் vs இலங்கை, இரண்டாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.
இலங்கை அணி இம்மாதம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்ட் டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்றுவரும் டி20 தொடரில் இலங்கை அணி முதல் போட்டியில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை சில்ஹெட்டில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் இலங்கை அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
Trending
- மோதும் அணிகள் - வங்கதேசம் vs இலங்கை
- இடம் - சர்வதேச கிரிக்கெட் மைதானம், சில்ஹெட்
- நேரம் - மாலை 5.30 மணி (இந்திய நேரப்படி)
பிட்ச் ரிப்போர்ட்
சில்ஹேட்டில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் வரலாற்றில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்து வருகிறது. அதேபோல் இங்கு வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் ஆதரவு இருக்கும். இதனால் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சரசாரியானது 149 ஆக உள்ளது. இதன் காரணமாக போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீசுவது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
நேரலை
வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரை ரசிகர்கள் ஃபேன்கோட் செயலியில் நேரலையில் காணலாம்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 14
- இலங்கை - 10
- வங்கதேசம் - 04
உத்தேச லெவன்
வங்கதேசம்: சௌமியா சர்க்கார், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கே), தாவ்ஹித் ஹிரிடோய், ஜகார் அலி, மஹேதி ஹசன், மஹ்முதுல்லா, தஸ்கின் அஹ்மத், ஷொரிஃபுல் இஸ்லாம், முஸ்தஃபிசூர் ரஹ்மான், ரிஷாத் ஹொசைன்.
இலங்கை: அவிஷ்க ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா (கே), கமிந்து மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனகா, மஹீஷ் தீக்ஷனா, அகிலா தனஞ்செயா, பினுர ஃபெர்னாண்டோ, மதீஷா பத்திரனா.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்கள் - லிட்டன் தாஸ், குசல் மெண்டிஸ், சதீரா சமரவிக்ரமா (துணைக்கேப்டன்)
- பேட்டர்ஸ் - மஹ்முதுல்லா, சரித் அசலங்கா
- ஆல்ரவுண்டர்கள் - ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனகா, சௌமீய சர்கார் (கேப்டன்), மெஹிதி ஹசன்
- பந்துவீச்சாளர்கள் - முஸ்தஃபிசூர் ரஹ்மான், மதீஷா பதிரனா
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now