ENG vs SL, 3rd Test: சதமடித்து பதிலடி கொடுத்த ஒல்லி போப்; வலிமையான நிலையில் இங்கிலாந்து அணி!

ENG vs SL, 3rd Test: சதமடித்து பதிலடி கொடுத்த ஒல்லி போப்; வலிமையான நிலையில் இங்கிலாந்து அணி!
இலங்கை அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியானது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News