கரோனா தொற்றால் உயிரிழந்த பிசிசிஐ நடுவர்!

BCCI Match Referee Prasanta Mohapatra Dies Of Covid-19
ஒடிசா அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐயின் போட்டி நடுவருமானவர் பிரசாந்தா மோகபத்ரா. 47 வயதான இவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, புவனேஷ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில், பிரசாந்தா மோகபத்ரா இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இத்தகவலை ஒடிசா கிரிக்கெட் சங்கம் உறுதி செய்ததுடன், தனது இரங்கலையும் தெரியப்படுத்தியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு தான் பிசிசிஐயின் போட்டி நடுவரான ராஜேந்திர ஜடேஜா கரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், தற்போது மற்றொரு நடுவரும் உயிரிழந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News