இந்திய மகளிர் அணியின் டெஸ்ட் ஜெர்சியை வெளியிட்ட பிசிசிஐ!

BCCI unveils Indian women's team new Test kit ahead of England tour
இந்திய மகளிர் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
இத்தொடர்களுக்கான இந்திய மகளிர் அணி மும்பையிலுள்ள பிசிசிஐ விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு, ஜூன் 2ஆம் தேதி இங்கிலாந்து செல்லவுள்ளது.
இந்நிலையில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய மகளிர் அணியின் ஜெர்சி மற்றும் உடைமைகளை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.
முன்னதாக இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் டெஸ்ட் ஜெர்ஸியை அணிந்து வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News