‘களத்தில் அரக்கன்; வெளியில் குழந்தை’ கிறிஸ் கெய்லின் சேட்டைகள் நிறைந்த காணொளி!

Funny Moments From The Universe Boss - Chris Gayle (VIDEO)
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனும், டி20 கிரிக்கெட்டின் ஜாம்பவானுமானவர் கிறிஸ் கெய்ல். இவர் மைதானத்தில் களமிறங்கினால் ரசிகர்களுக்கு நிச்சயம் வானவேடிக்கை தான். அப்படி ஒரு அதிரடியான ஆட்டத்தை சர்வதேச கிரிக்கெட்டில் அரங்கேற்றி காட்டியவர்.
இந்நிலையில் மைதானத்தில் பந்து வீச்சாளர்களுக்கு அரக்கன் போல தோன்றும் கிறிஸ் கெய்ல், களத்திற்கு வெளியே குழந்தையை போன்று சேட்டைகள் செய்வதிலும் வல்லவர். இவரது அதிரடி ஆட்டத்துக்கு எந்தளவிற்கு ரசிகர்கள் உள்ளனரோ, அதே அளவிற்கு அவரது சேட்டைகளை ரசிப்பதற்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் ஐசிசி தனது யூடியூப் தளத்தில் கிறிஸ் கெய்லின் சேட்டைகள் நிறைந்த காணொலியை பகிர்ந்துள்ளது. உங்களுக்காக அக்காணொளி இதோ....!
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News