ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இந்தத் தொடர் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், போட்டியை நடத்தும் இந்தியா உள்பட 8 அணிகள் பிரதான சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெற்றுவிட்டன. எஞ்சியிருக்கும் 2 இடங்களுக்கான அணிகள் தகுதிச்சுற்று ஆட்டங்கள் மூலம் முடிவு செய்யப்படவுள்ளன.
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 18ஆவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் -நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ்: பிராண்டன் கிங், ஜான்சன் சார்லஸ், ஷமர் ப்ரூக்ஸ், ஷாய் ஹோப்(கே), நிக்கோலஸ் பூரன், ரோஸ்டன் சேஸ், ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்ட், கீமோ பால், அகீல் ஹோசைன், அல்ஸாரி ஜோசப்.
நெதர்லாந்து: மேக்ஸ் ஓடவுட், விக்ரம்ஜித் சிங், வெஸ்லி பாரேசி, பாஸ் டி லீட், தேஜா நிடமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ்(கே), சாகிப் சுல்பிகர், லோகன் வான் பீக், கிளேட்டன் ஃபிலாய்ட், ஆர்யன் தத், விவியன் கிங்மா.