தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக ரிஹான் ரிச்சர்ட் நியமனம்!

Finally, Cricket South Africa Has Rihan Richards As A President
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் இன்று காணொளி வாயிலாக நடைபெற்றது. முன்னதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் இக்கூட்டத்தில் தேர்வு செய்யப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று நடைபெற்ற இக்கூட்டத்தின் முடிவில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக ரிஹான் ரிச்சர்ட்டும், துணைத் தலைவராக டோனோவன் மேவும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர்களாக ஸ்டீவன் பட்லெண்டர், ஆண்ட்ரூ ஹட்சன், டக்மோர் லுஷாபா, லாசன் நாயுடு, ஆண்டிசா சுபேன், மார்க் ரெய்னர், முடிதாம்பி ராவேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News