ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம்: ‘கடினமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர்’ அலன் பார்டர்!

Meet The ICC Hall of Famers: Allan Border 'One of the toughest cricketers'
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அலன் பார்டர். 1978 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமான அலன் பார்டர் இதுவரை 156 டெஸ்ட், 273 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 18ஆயிரத்திற்கு அதிகமான ரன்களைக் குவித்துள்ளார்.
பேட்டிங் ஜாம்பவானான அலன் பார்டர், டெஸ்ட் கிரிக்கெட்டின் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்து, 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய ஒரே கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார். இச்சாதனையை இதுநாள் வரை எந்த கிரிக்கெட் வீரரும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரரான அலன் பார்டர் தற்போது ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேமர்கள் வரிசையில் இணைந்துள்ளார். இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள யூடியூப் காணொளி இதோ..!
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News