தி ஹண்ரட்: நார்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணியின் ஜெமிமா!

The Hundred: Jemimah Rodrigues to represent Northern Superchargers
இங்கிலாந்து, வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் சார்பில் புதிய முயற்சியாக ஆண்கள், பெண்கள் அணிகள் பங்கேற்கும் ‘தி ஹண்ரட்’ கிரிக்கெட் தொடர் வருகிற ஜூலை மாதம் நடத்தப்பட உள்ளது. வரும் ஜூலை 21 ஆம் தேதி முதல் தொடங்கும் இத்தொடரின் முதலாவது சீசனில் நான்கு அணிகள் பங்கேற்கின்றன.
இதில் இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா சதர்ன் பிரேவ் அணிக்காகவும், ஹர்மன்பிரீத் கவுர் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்காகவும், ஷஃபாலி வர்மா பர்மிங்ஹாம் பீனிக்ஸ் அணிக்காகவும் விளையாடவுள்ளது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் நார்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News