பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகிய ஹசன் அலி!

Hasan Ali pulls out of PSL 6 due to personal reasons
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் அபுதாபில் கடந்த ஜூன் 9ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களினால் நடப்பாண்டு பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகுவதாக ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“தனிப்பட்ட காரணங்களினால் நடப்பாண்டு பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகுவதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். கிரிக்கெட்டை விட பல விஷயங்காள் வாழ்க்கையில் முக்கியமானவை. அதிலும் குடும்பத்தை விட வேறு எதுவும் அவ்வளவு முக்கியமானது அல்ல” என்று தெரிவித்துள்ளார்.
இதனால் அவர் பிஎஸ்எல் தொடரின் பயோ பபுள் சூழலில் இருந்து வெளியேறி பாகிஸ்தான் திரும்பவுள்ளார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News