கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய திருவிழாவான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் இந்தியாவில் தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்பு மினி கிரிக்கெட் திருவிழாவாக ஆசிய கோப்பைத் தொடர் நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தான், இலங்கை நாடுகள் இணைந்து நடத்தும் இந்த தொடர் பாகிஸ்தானில் கடந்த 30ஆம் தேதியே தொடங்கிவிட்டது. பாகிஸ்தான், இலங்கை அணிகள் வெற்றியுடன் இந்த தொடரை தொடங்கியுள்ள நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டி இன்று நடைபெறுகிறது.
பல்லகலேவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பாகிஸ்தானை பந்துவீச அழைத்துள்ளார். இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் மூன்று வேகப்பந்து வீச்சாளர் மற்றும் இரண்டு ஸ்பின்னர்களுடன் விளையாடுவதாக ரோஹித் சர்மா அறிவித்துள்ளார்.
இந்தியா: ரோஹித் சர்மா (கே), ஷுப்மான் கில், இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
பாகிஸ்தான்: பாபர் ஆசாம் (கே), ஃபகர் ஸமான், இமாம் உல் ஹக், முகமது ரிஸ்வான், இஃப்திகார் அகமது, ஆகா சல்மான், ஷதாப் கான், முகமது நவாஸ், ஷாஹீன் அஃப்ரிடி, நசிம் ஷா, ஹாரிஸ் ரவுஃப்