அறிமுக போட்டியில் சதமடித்து சாதனை படைத்த மேத்யூ பிரீட்ஸ்கி!
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்களைச் சேர்த்தது. இதில் அறிமுக வீரராக களமிறங்கிய மேத்யூ பிரீட்ஸ்கி சதமடித்து அசத்தியதுடன் 150 ரன்களைக் குவித்தார். இதன்மூலம் அவர் சில சாதனைகளையும்…
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்களைச் சேர்த்தது. இதில் அறிமுக வீரராக களமிறங்கிய மேத்யூ பிரீட்ஸ்கி சதமடித்து அசத்தியதுடன் 150 ரன்களைக் குவித்தார். இதன்மூலம் அவர் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.