ஹைலைட்ஸ் காணொளி: லாகூர் கலந்தர்ஸ் vs பெஸ்வர் லாஸ்மி!

Watch Highlights : Lahore Qalandars vs Peshawar Zalmi
பிஎஸ்எல் தொடரில் நேற்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி, பெஸ்வர் லாஸ்மி அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெஸ்வர் ஸால்மி அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்து விளையாடியது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களை எடுத்தது. அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பெஸ்வர் ஸால்மி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களை மட்டுமே எடுத்து 10ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இப்போட்டியில் லாகூர் கலந்தர்ஸ் அணியின் ரஷீத் கான் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார். இப்போட்டியின் ஹைலைட்ஸ் காணொளி இதோ..!
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News