ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம்: ‘இந்திய கிரிக்கெட்டின் அசுரன்’ சுனில் கவாஸ்கர்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமானவர் சுனில் கவாஸ்கர். இந்திய அணி சார்பாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை சுனில் கவாஸ்கர் படைத்துள்ளார்.
இந்திய அணிக்காக 1971ஆம் ஆண்டு அறிமுகமான சுனில் கவாஸ்கர், தனது அதிரடியான பேட்டிங்கால் 125 டெஸ்ட் போட்டிகளில் 34 சதம், 45 அரைசதங்கள் குவித்து 10,122 ரன்களையும், 108 ஒருநாள் போட்டிகளில் 3,092 ரன்களையும் குவித்து அசத்தியுள்ளார்.
இந்நிலையில் அதிரடி பேட்டிங்குக்கு பெயர்போன சுனில் கவாஸ்கர், ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேமர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த ஐசிசியின் யூடியூப் காணொளி உங்களுக்காக இதோ..!
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News